சோ.பாவும் டெல்லிக்கு ஓடுகிறார்
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பிரச்சினை தொடர்பாக சோனியா காந்தியுடன் விவாதிப்பதற்காக செயல் தலைவர்இளங்கோவன் டெல்லி சென்றுள்ள நிலையில், தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் இன்று இரவு டெல்லி செல்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைமையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைவர், செயல் தலைவர் என்று இரண்டுபதவிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தொடங்கிய குழப்பம் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
சோ.பாவுக்கும், இளங்கோவனுக்கும் ஒத்தே வரவில்லை. இதைத் தொடர்ந்து இடையில் ஒருமுறை டெல்லிக்குவரவழைக்கப்பட்ட இருவருக்கும் காங்கிரஸ் மேலிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தது.
அதற்குப் பிறகு இருவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக அறிவித்தனர். ஆனாலும் சண்டை தொடர்ந்தது.இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று தமிழகத்திற்கான காங்கிரஸ்பொறுப்பாளர் கமல்நாத் அறிவித்தார்.
இது ஜி.கே.வாசன் கோஷ்டிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கோஷ்டியைச் சேர்ந்த சோ.பா. தனதுராஜினாமா கடிதத்தை மேலிடத்துக்கு அனுப்பினார்.
ஆனால், சோனியாவுடன் வாசன் பேசியதைத் தொடர்ந்து ராஜினாமா விவகாரத்தை மறைத்துவிட முடிவுசெய்யப்பட்டது. சோ.பாவே தலைவராகத் தொடர்வார் என கமல்நாத் மற்றும் இளங்கோவன் மூலம் சொல்லவைத்தார் சோனியா.
தலைவர் யார் என்பதில் இத்தனை குழப்பமா என்று கட்சியின்பால் அபிமானம் கொண்டுள்ள கொஞ்ச நஞ்சமுள்ளதொண்டர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் இளங்கோவன் டெல்லி சென்றார்.
அங்கு சோனியா காந்தியை அவர் சந்திக்கிறார். இந் நிலையில் சோ.பாவை சென்னைக்கு வருமாறு ஜி.கே. வாசன்அழைத்தார். ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு பரமக்குடியில் தனது வீட்டில் போய் முடங்கியிருந்த சோ.பா.மதுரை வழியாக இன்று காலை சென்னை வந்தார்.
சோ.பா. மற்றும் தனது கோஷ்டியின் பிற முக்கியத் தலைவர்களுடன் வாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.இதன் பின்னர் இருவரும் டெல்லி செல்கின்றனர்.
நாளை சோ.பாவையும் இளங்கோவனையும் ஒரே நேரத்தில் சோனியா காந்தி சந்திப்பார் என்று தெரிகிறது.அப்போது இவர்களுக்கு அட்வைசுடன் சேர்த்து டோஸ் கிடைக்கும்.
பேசாமல் இந்த இருவரையும் தூக்கிவிட்டு ஜெயந்தி நடராஜனை தலைவராகப் போட்டுவிடலாம் என கமல்நாத்மீண்டும் சோனியாவுக்கு ஆலோசனை சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications