இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்டோர் மீது தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் இலவச வேட்டி, சேலைஊழல் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கியதில் பல கோடி அளவுக்கு ஊழல்நடந்தது. மேலும் சேலையின் நீளத்தைக் குறைத்தும் மோசடி நடந்தது.

இது தவிர பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கியதில் ஊழல் செய்யப்பட்டது.இது தொடர்பாகஅப்போதையே சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமா உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்தவழக்கு விசாரணை 2-வது தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 4பேரை கூடுதல் சாட்சிகளாக விசாரிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால்,மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஏன் புதிதாக சாட்சியை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட சிறப்புநீதிமன்ற நீதிபதி, அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்த நிராகரிப்பை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. மூலம் உயர் நீதிமன்றத்தில் அரசு அப்பீல் மனு தாக்கல்செய்தது. அதில், இலவச வேட்டி-சேலை ஊழல் வழக்கில் சில உண்மைகளை நிரூபிப்பதற்கு, யாரையும்சாட்சிகளாக அழைத்து விசாரணை செய்ய அனுமதி தரும்படி கோர அரசுக்கு உரிமை உள்ளது.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அரசு தரப்பில் காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டது என்ற காரணத்தைக்கூறிதனிக்கோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். குறுக்கு விசாரணை முடிந்த பிறகு 2 ஆண்டுகள் கழித்து சிலசாட்சிகளை விசாரிப்பதற்கு இந்திரகுமாரி தரப்புக்கு தனிக்கோர்ட்டு ஏற்கனவே அனுமதி வழங்கியது.

இந்த சலுகையை அரசு தரப்புக்கும் வழங்க வேண்டும். இந்த இலவச வேட்டி-சேலை வழக்கில் நியாயமான முடிவுஏற்படுவதற்கு இந்த சாட்சியம் மிகவும் அவசியமானது.

எனவே அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும், மேலும் இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவே இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றுமனுவில் கோரப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவம்,வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திரகுமாரி, அவரது முன்னாள் தனி உதவியாளர் வெங்கடகிருஷ்ணன்,கோவை தாமோதரசாமி, பூந்தமல்லி முருகேசன், கோவை ஆறுமுகம், கோவை சண்முக சுந்தரம் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாத்து வரும் 2-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொன்னுச்சாமி வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர் பதவி நீட்டிப்பில் தான் பணியாற்றி வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+