கருணாநிதியின் நில விவகாரம்: மாநகராட்சியில் முக்கிய பைல் மாயம்
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மாநகராட்சி நிலத்தை வழங்கியது தொடர்பான கோப்பு மாநகராட்சிஅலுவலகத்தில் இருந்து மாயமாகியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் பின் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலம்ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தீர்மானம்கொண்டு வந்தார்.
இந்த நிலத்தை மாவட்ட கலெக்டர் மீட்டுத் தரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், கடந்த 1967ம் ஆண்டு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே இந்த நிலம்கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று 1968ம் ஆண்டில் தமிழக அரசு ஒரு ஆணையும்பிறப்பித்தது.
இதன் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சியில் அந்த அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது. மாநகராட்சிநிலத்தை கருணாநிதி மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்துகருணாநிதி நீதிமன்றம் செல்ல முடிவு செய்யவே, அதன் பின் எம்.ஜி.ஆர். இந்த விவகாரத்தை கிடப்பில்போட்டுவிட்டார்.
ஆனால், தற்போது அந்த நில விவகாரத்தை அதிமுக மீண்டும் கிளப்பியுள்ளது. முதல் கட்டமாக மாநகராட்சியில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வைத்து நிலததைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறுமாவட்ட நிர்வாகத்துக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக 1967-68ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியின்தீர்மானங்கள், அரசாணை போன்றவை அடங்கிய பைல் காப்பியைத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் திமுககவுன்சிலர்க கேட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் பைலைத் தேடியபோது தான் அது காணாமல் போனது தெரியவந்தது. இதனால்அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். திட்டமிட்டே இந்தப் பைலை காணாமல் போகச் செய்துள்ளனர் என்றுதெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications