தா.கி. கொலை வழக்கு: இன்று அடையாள அணிவகுப்பு
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெறுகிறது.
| தா.கிருட்டிணனின் சகோதரர் ராமையா, அவரது மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் குற்றவாளிகளை அடையாளம்காட்டுகிறார்கள். |
அழகிரி- ராஜாத்தி அம்மாள் சந்திப்பு:
இந் நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகியை, கருணாநிதியின் துணைவி ராஜாத்திஅம்மாளும் மகள் கனிமொழியும் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் குடும்பத்தினருக்கும் ராஜாத்தி அம்மாள் குடும்பத்தினருக்கும் இடையேநல்லுறவு இருந்ததில்லை. ஆனால், கருணாநிதி கைதுக்குப் பிறகு நிலைமை மாறியது. இப்போது இருகுடும்பத்தினரும் நெருக்கமாக உளளனர்.
| ராஜாத்தி அம்மாளுக்கு கருணாநிதி கட்டியுள்ள புதிய வீட்டை ஸ்டாலின் போய் பார்த்துவிட்டு வந்தார்.
இந் நிலையில் அழகிரியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துள்ளார். உடன் மகள் கனிமொழியும் சென்றார். மேலும்அழகிரியின் தாய்மாமனான இயக்குனர் அமிர்தத்தின் மனைவி வசந்தாம்பாளும் உடன் சென்றார். |
அழகிரி வீட்டில் ஆதாரம் சிக்கவில்லை..
இதற்கிடையே அழகிரியின் மீது விசிடி காப்பிரைட் மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
| தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமானகடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால், அழகிரியின் ராயல் வீடியோஸ் கடையில் சோதனை நடத்தியபோது லைசென்ஸ் இல்லாத 4,037 திருட்டுவிசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். |
|
வீடியோ கடையில் சோதனை நடந்தபோது, அழகியின் மனைவி காந்தி, வழக்கறிஞர் பழனிச்சாமி ஆகியோர்உடன் இருந்தனர். சோதனை குறித்து பழனிச்சாமி கூறுகையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி மீதுஆதாரம் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். எனவே என்ன செய்வதென்று தெரியாமல், திருட்டு விசிடிவைத்திருந்ததாக பொய் வழக்கைப் போட்டுள்ளனர் என்றார்.















Click it and Unblock the Notifications