கோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி
கோவை:
கோவை நகரில் கடந்த1998ம்ஆண்டில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பைப் போல மீண்டும் தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் பீதி நிலவுகிறது.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதையடுத்து மதக் கலவரமும்மூண்டது. அதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந் நிலையில் மீண்டும் ஒரு தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நத்த தீவிரவாதகிள் திட்டமிட்டுள்ளதாக மத்தியஉளவுப் பிரிவான ஐ.பிக்கு தகவல் கிடைத்தது. அதே போல மாநில உளவுப் பிரிவு போலீசாருக்கும் இந்தத் தகவல்எட்டியுள்ளது.
இந்தச் சதித் திட்டம் கேரளாவில் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகள்தான் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், கோவையைச் சேர்ந்த மலையாள இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு இந்தஅமைப்புகள் தீவிரவாத பயிற்சி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.
குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர்கள்பயிற்சியை முடித்து ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் தமிழகத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஐ.பி.கூறியுள்ளது.
இந்த குண்டுகள் திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரியவருகிறது.
ஒரே சமயத்தில் கோவை நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதும், கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவர் அப்துல் மதானியை மீட்பதுமேஇவர்களது திட்டத்தின் முக்கிய அம்சம் என்றும் மாநில அரசை ஐ.பி. எச்சரித்துள்ளது.
இதையடுத்து கோவை நகர் முழுவதிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நகருக்குள்நுழையும் சாலைகளில் பல செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன.
நகரில் சந்தேகத்துக்கிடமானசில இடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர்,மேட்டுப்பாளையத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications