கருணாநிதி வீட்டு விவகாரம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அமளி
சென்னை:
சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள கருணாநிதி வீட்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான 700 சதுர அடி நிலம்ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று திமுகவினருக்கும்அதிமுகவினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இதனால் மன்றக் கூட்டத்தில் அமளி, துமளி நிலவியது.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில், 700 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீண்டும் மாநகராட்சியே எடுத்துக் கொள்வதற்குவகை செய்யும் தீர்மானம் கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த நிலத்தை உரிய முறையில் தான் மாநகராட்சியிடம் இருந்து பெற்றதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் கருணாநிதியின் நிலையை விளக்கும் மாநகராட்சியின் பைல்கள் திடீரென காணாமல் போய்விட்டன.
இந் நிலையில், இன்று மாநகராட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது நிலத்தைத் திரும்பப் பெறும் தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு எதிராக தாறுமாறாகக் கருத்துத்தெவித்தனர். இதையடுத்து திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்மன்றத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்துவிட்டு மன்றக்கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதன் பின்னர் மீண்டும் மன்றத்துக்கு திமுகவினர் வந்தனர். அப்போது வீராணம் திட்டத்தில் கருணாநிதி ஊழல்செய்ததாக அதிமுக கவுன்சிலர்களும் துணை மேயர் தியாகராஜனும் புகார் கூறவே, மீண்டும் இரு தரப்பினருக்கும்கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவினரை வெளியேற்ற தியாகராஜன் உத்தரவிட்டார். இத்ை தொடர்ந்து காவலர்கள் 55 திமுககவுன்சிலர்களையும் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications