ஜெ. நடத்திய மெகா திருமணங்கள் குறித்து கருணாநிதி
சென்னை:
தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட இலவச திருமணங்களோடு ஒப்பிடும் போது ஜெயலலிதா நடத்தி வைத்ததிருமணங்கள் வெறும் பிஸ்கோத்து என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கேள்வி: ஒரே பந்தலில் ஆயிரத்து 53 திருமணங்களை இலவசமாக நடத்தி விட்டு, இது அ.தி.மு.க., ஆட்சியின்ஆன்மிக புரட்சி என்று முதல்வர் ஜெயலலிதா முழங்கியிருக்கிறாரே?.
பதில்: அய்யர்கள் என்ன, மந்திரங்கள் என்ன, அக்னி சாட்சியாக ஓம குண்டங்கள் என்ன, இவ்வளவு புரட்சி செய்துபெரியாரையும், அண்ணாவையும் அவர்கள் பரப்பிய சுயமரியாதை திருமண முறைகளையும் தலைகீழாகப்புரட்டிப் போட்டுவிட்ட ஜெயலலிதாவின் செயல் ஒரு புரட்சி தான்.
கேள்வி: அ.தி.மு.கவின் முந்தைய ஆட்சியில் சிதம்பரத்தில் 2,500 இலவச திருமணங்களையும், திருச்சியில் 5,004திருமணங்களையும், இப்போது 1,053 திருமணங்களையும் நடத்தியிருக்கிறோம் என்கிராரே முதல்வர்ஜெயலலிதா?
பதில்: வளர்ப்பு மகன் திருமணத்தை விட்டு விட்டார். பரவாயில்லை. தி.மு.க. ஆட்சியில் மூவலூர் ராமாமிர்தம்அம்மையார் திருமண உதவித் திட்டம் என்ற பெயரால் ஏழைப் பெண்களுக்கு தலா 5,000 உதவித் தொகைவழங்கப்பட்டு 53,229 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதே.
அதன் பின் 1996க்கு பிறகு இந்தத் தொகை ரூ. 10,000 ஆக உயர்த்தப்பட்டு 2,28,593 ஏழைப் பெண்களுக்குஇலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை ரூ. 228.59 கோடி. ஜெயலலிதா செய்து வைத்த திருமணங்களுக்கு ஆனசெலவு வெறும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்.
பாமர மொழியில் சொல்ல வேண்டும் என்றால் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டத்தோடு ஒப்பிடும்போது, இது என்ன பிஸ்கோத்து என்று தான் இந்த திருமணங்களைப் பற்றிச் சொல்லவேண்டும்.
கேள்வி: ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஏன் மத்திய அரசில் கூட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குஇட ஒதுக்கீடு என்ற திட்டம் அண்மைக் காலத்தில் வேகமாகப் பேசப்பட்டு வருகிறதே?
பதில்: 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த இந்திரா சாவ்னி வழக்கின்படி பொருளாதார அடிப்படையைமட்டும் கருத்தில் கொண்டு பின் தங்கிய வகுப்பினரை தீர்மானம் செய்ய முடியாது.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு அட்டார்னி ஜெனரலிடம் கருத்து கேட்டதற்கு, அரசியல் சட்டத்தில்தற்போதுள்ள விதிகள்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்போக்கு வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றுவது அரசியல் சட்டத்துக்கே முரணாக அமைந்து விடும் என்றும், அரசியல்சட்டத்தில் திருத்தம் செய்தால் தான் அதைச் செய்ய முடியும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications