கருணாநிதிக்கு அழகிரி எழுதிய கடிதங்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
மதுரை:
திமுக உட் கட்சித் தேர்தல், மோதல் தொடர்பாகவும், தா.கிருட்டிணன் தொடர்பாகவும் திமுக தலைவர்கருணாநிதிக்கு, அழகிரி எழுதிய 3 கடிதங்கள் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
தா.கிருட்டிணன் கொலை தொடர்பான ஆதாரங்களை மதுரை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதில் அழகிரி வீட்டில் கருணாநிதிக்கு அவர் எழுதிய 3 கடிதங்களின் நகல்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.ஆனால், அதில் ஒரு கடிதத்தில் தா.கிக்கும் தனக்கும் மோதல் ஏதும் இல்லை என்று அழகிரி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்தக் கடிதத்தை மட்டும் மறைத்துவிட்ட போலீசார் மற்ற இரண்டு கடிதங்களை பத்திரிக்கைகளுக்குத்தந்தனர். இதையடுத்து இன்னொரு கடிதத்தை கருணாநிதியே வெளியிட்டார்.
இதையடுத்து கருணாநிதி வசம் இருந்த 3 கடிதங்களையும் கேட்டுப் பெற்ற போலீசார் அவற்றை மதுரை 6-வதுகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனிதாவிடம் நேற்று ஒப்படைத்தனர்.
மேலும் ஒருவர் சரண்:
இதற்கிடையே தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்து மதுயைைச் சேர்ந்த பாண்டி என்றஊழப்பாண்டி இன்று மதுரை 6வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அழகிரியுடன் தயாளு-பாலு சந்திப்பு:
இந் நிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியை அவரது தாயார் தயாளு அம்மாளும், மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலுவும் சந்தித்துப் பேசினர்.
விலகுகிறார் ராமையா:
இதற்கிடையே தா.கிருட்டிணனின் தம்பி ராமையா திமுகவில் இருந்து விலகிவிடத் திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது. விரைவில் அவர் இதனை அறிவிக்க உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications