நிர்வாகம்: ரணில் அறிவிப்பை நிராகரித்தனர் புலிகள்
கொழும்பு:
வட-கிழக்குப் பகுதியில் இடைக் கால நிர்வாகத்தை அமைப்பது குறித்து பேச்சு நடத்தத் தயார் என்ற பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயின் வெற்று அறிவிப்பை வைத்துக் கொண்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப முடியாது எனவிடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த இடைக்கால நிர்வாகம் அமைப்பதற்கான செயல் திட்டத்தை அறிவித்து, உண்மையான முயற்சிகளையும் அரசுஎடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று புலிகள் கூறியுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர வசதியாக, புலிகளின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிர்வாகத்தைஅமைக்கத் தயார் என்றும், அது குறித்துப் பேசலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்கே நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இது குறித்து புலிகளுடன் நார்வே தூதர்கள் பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இப்போது சிக்கலில் உள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்குத்தான் உண்டு. தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு புலிகள் திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்என்று தெரிவித்திருந்தார் ரணில்.
இதற்குத் தான் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இன்று விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நெட்.காம் இணையத் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இடைக்கால கவுன்சில் எப்படி இருக்கும், அதன் கட்டமைப்பு என்ன ஆகியவை குறித்து பிரதமர் ரணில் விளக்கம்ஏதும் தரவில்லை. எங்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் நடத்தும் விதத்தையே முழுமையாக மாற்றியாகவேண்டும் என்று கோருகிறோம்.
தமிழர்களுக்கு மறுவாழ்வு தரும் திடமான செயல் திட்டத்தின் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தைகள்இருக்கலாம். திட்டமே இல்லாமல், எதையும் அமலாக்காமல் பேச்சு மட்டுமே நடத்திக் கொண்டிருக்க முடியாது.இதை நார்வே அமைதித் தூதர்களிடமும் தெரிவித்துள்ளோம்.
இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் எதையும் வலியுறுத்த முடியாது. நிர்வாகத்தின்அதிகாரம் என்ன, அதன் கட்டமைப்பு என்ன போன்றவற்றை அரசு தான் தெரிவிக்க வேண்டும். எந்த அளவுக்குஅரசியல், நிதி, நிர்வாக அதிகாரங்களை இடைக்காலக் கவுன்சிலுக்குத் தர அரசு தயாராக உள்ளது என்பதையும்விவரிக்க வேண்டும்.
அதிகாரத்தை பங்கிட மறுக்கும் அரசியல் சட்டம், தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான ஜனாதிபதி (அதிபர்சந்திரிகா) ஆகியவற்றின் கீழ் செயல்படும் ரணிலின் அரசு, இடைக்கால நிர்வாகம் குறித்து எந்த உத்தரவாதமும் தரத்தயாராக இல்லை.
இந் நிலையில் புலிகள் தான் இதற்குத் தீர்வு சொல்ல வேண்டும் என்று சொல்வது நியாயமற்றது. இடைக்காலநிர்வாகம் இப்படித்தான் இருக்க வேண்டும், இதெல்லாம் வேண்டும் என்று எதையும் நிர்பந்திக்க நாங்கள் தயாராகஇல்லை.
உங்களால் எவ்வளவு அதிகாரத்தைத் தர முடியும், எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறீர்கள்என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம். ஆகவே, அரசு தான் இந்த விஷயத்தில் மேலும் விளக்கங்கள் தரவேண்டும். இடைக்கால நிர்வாகம் அமைப்பதில் எந்த அளவுக்கு அரசு தீவிரமாக இருக்கிறது என்பதை செயலில்காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications