போலீஸ் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம சாவு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மர்மமானமுறையில் இறந்தார். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கணேசன். இவரது மனைவி தேவி. இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது தேவியை, கணேசன் அடித்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தேவி போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார்.
புகாரின் பேரில் கணேசனை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால்,காவல் நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்ட அரை மணி நேரத்திலேயே கணேசன் இறந்து விட்டதாக போலீசார்தெரிவித்தனர்.
இதையடுத்து கணேசனின் உறவினர்களும் ஊர் மக்களும் காவல் நிலையத்தில் கூடினர்.
போலீஸார் தான் கணேசனை அடித்துக் கொன்று விட்டதாக அவர்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அங்குபதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீஸ் உயரதிகாரிகள் அங்கு விரைந்து வந்து கணேசனின் உறவினர்களைசமாதானப்படுத்தினர்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, கணேசனுக்கு வலிப்பு வந்ததாகவும், இதனால் தான் அவர்இறந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
ஆனால், கணேசனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறியுள்ள அவரது உறவினர்க, சாவுக்குக்காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதவரை உடலை வாங்கப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications