நான் தற்கொலைக்கு முயலவில்லை: டி.எம்.எஸ். மறுப்பு
சென்னை:
எரிசாராயத்தைக் குடித்து உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும்பின்னணிப் பாடகர் டி.எம். செளந்தர்ராஜன், தான் தற்கொலைக்கு முயலவில்லை என்று கூறியுள்ளார்.
எரிசாராயத்தைக் குடித்து மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவரது அவரது உடல் நிலை தேறி வருகிறது.
இந் நிலையில் நிருபர்களையும் அவர் சந்தித்தார். அவர் கூறுகையில், நான் தற்கொலைக்கு முயலவில்லை.காயத்துக்கு போட வைத்திருந்த ஸ்பிரிட்டை, இருமல் மருந்து என்று நினைத்து தவறுதலாகக் குடித்துவிட்டேன்.
அதைக் குடித்த ஒரு மணி நேரம் கழித்துத் தான் நெஞ்சு எரிய ஆரம்பித்தது. மயக்கமும் வாந்தியும் வந்தது. உடனேஇங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.
என் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் தொடர்ந்துதொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் மிகவும்நெகிழ்ந்துபோய் உள்ளேன் என்றார்.
ஆனால், இது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் குரல்களாக திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.எம்.எஸ். என்றுஅன்புடன் அழைக்கப்படும் டி.எம்.செளந்தரராஜன். 81 வயதாகும் டி.எம்.எஸ். கடந்த 50 ஆண்டுகளாக சினிமாப்பாடல்கள், பக்திப் பாடல்களை பாடி வருகிறார்.
கிட்டத்தட்ட 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் டி.எம்.எஸ். 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரதுமுருகன் பக்திப் பாடல்கள் ஒலிக்காத தமிழர் வீடுகளே இல்லை எனலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications