மும்பை அருகே பாறையில் மோதி ரயில் கவிழ்ந்தது: 23 பேர் பலி
கார்வார்:
கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில், தண்டவாளத்தில் கிடந்தபாறையில் மோதில் கவிழ்ந்தது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்றிரவு 10.30 மணியளவில் மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுரங்கப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் கிடந்த பாறையில் மோதிய இந்த ரயிலின் 3 பெட்டிகள் கவிழுந்துஉருண்டன.
அந்தப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அங்கு நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டுதண்டவாளத்தில் விழுந்தன. இதில் ஒரு பாறையில் தான் ரயில் மோதியது.
கோடை கால சிறப்பு ரயிலான இந்த ரயில் கொங்கன் ரயில்வேயால் இயக்கப்பட்டது.
இந்த விபத்தில் பலியானவ 23 பேரில் 3 பேர் குழந்தைகள், 4 பேர் பெண்கள். கொங்கன் ரயில் பாதையில்நடந்துள்ள முதல் மிகப் பெரிய விபத்து இதுவேயாகும்.
காயமடைந்த 25 பேரில 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இதில் ரயிலின் 2டிரைவர்களும் அடங்குவர்.
இந்த விபத்தையடுத்து மும்பை-கோவா இடையிலான ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை பிகாரிலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டது. முங்கர் மாவட்டம் தஸ்ரத்பூர் ரயில் நிலையம்அருகே பராக்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதில், யாரும் காயமடையவில்லை.
இந்த இரு ரயில் விபத்துக்கள் குறித்தும் ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications