ஆந்திரா: ரயில் கவிழ்ந்து சாலையில் விழுந்து 14 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வாரங்கல் (ஆந்திரா):

வாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த ரயிலின் என்ஜினும் இரண்டு பெட்டிகளும்கவிழ்ந்து சாலையில் விழுந்தன. இதில் ஆட்டோவில் இருந்த 3 பேரும், ஸ்கூட்டர்களில் சென்ற 4 பேரும்,சாலையில் நடந்து சென்ற 4 பேரும், ரயிலில் இருந்த 3 பேரும் பலியாயினர்.

இந்த அதிர்ச்சிகரமான விபத்துக்கு ரயில் டிரைவரின் தவறே காரணம் என்று கருதப்படுகிறது. இந்த விபத்தில்மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் ரயில் 10மணியளவில் வாரங்கல் ரயில் நிலையத்தின் அருகே வந்தது.

அப்போது தான் ரயிலின் பிரேக் செயல்படாதததை டிரைவர் கண்டறிந்தார். இதையடுத்து ரயிலை வாரங்கல் ரயில்நிலையத்தில நிறுத்த முடியாது என்பதை அறிந்த டிரைவர் அதைத் தொடர்ந்து இயக்க முயன்றார். அப்போது சாலைமேல் உள்ள ரயில் பாலத்தில் அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.

திடீரென வேகம் பிடித்த அந்த ரயிலின் என்ஜின் கழன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

இதில் கீழே சென்று கொண்டிருந்த ஆட்டோ, இரு ஸ்கூட்டர்கள் நசுங்கின. ஆட்டோவில் இருந்த 5 பேரில் 3 பேர்அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஸ்கூட்டர்களில் இருந்த 4 பேரும் பலியாயினர்.

தொடர்ந்து இரு பெட்டிகளும் கீழே விழுந்தன. இதில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 பேர்பலியாயினர். ரயில் பெட்டிகளில் இருந்த மூன்று பேரும் உடல் நசுங்கி இறந்தனர்.

மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நசுங்கிக் கிடக்கும் பெட்டிகளில் மேலும் பலபயணிகள் சிக்கியுள்ளனர். இந்தப் பெட்டிகளை கேஸ் கட்டர்கள் மூலம் உடைத்து பயணிகளை மீட்கும் பணிநடந்து வருகிறது.

என்ஜின் மற்றும் பெட்டிகளின் கீழே பலர் சிக்கியுள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கு டிரைவரின் தவறே காரணமாக இருக்கலாம் என ரயில்வேத்துறை அமைச்சர் நிதிஷ் குமார்கூறியுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அவர் கூறுகையில், சிக்னலைக் கவனிக்காமல் ரயிலைடிரைவர் இயக்கியுள்ளார். இதனால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆனால், ரயிலின் பிரேக் பிடிக்காததால் தான் அதை நிறுத்தாமல் இயக்கியதாக டிரைவர் கூறியுள்ளதாகத்தெரிகிறது.

இதே இடத்தில் 1991ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதே போன்ற ஒரு விபத்து நடந்துள்ளது. அப்போதும் ரயில்சாலையில் விழுந்தது. 7 பேர் பலியாயினர். இதனால் இந்தப் பாலத்தின் அமைப்பில் ஏதாவது பிரச்சனைஇருக்கலாம் என பொது மக்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+