திருட்டு விசிடி வழக்கு: அழகிரிக்கு ஜூலை 7 வரை சிறைக் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் உள்ள வீடியோ கடையில் திருட்டு விசிடிக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் மு.க.அழகிரிஇன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் ஜூலை 7ம் தேதி வரை காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார்.

தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அழகிரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்குத் தொடர்பாக அழகிரிக்குச் சொந்தமான வீடியோ கடையில் சமீபத்தில் வீடியோ பைரசி பிரிவுபோலீசார் சோதனை நடத்தினர். அப்போது 4,000க்கும் மேற்பட்ட உரிமம் பெறாத, திருட்டு விசிடிக்கள்பறிமுதல்செய்யப்பட்டன. (அழகிரி தரப்பில் 1,300 தான் என்கின்றனர்)

இதையடுத்து அழகிரி மீது திருச்சி விசிடி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாபணை மதுரை5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதையடுத்து திருச்சி சிறையில் இருந்து அவர் மதுரை கொண்டு வரப்பட்டார்.

மதுரைநீதிமன்ற வளாகத்தில் வேன் நின்றவுடன் அழகிரியை, ஒரு காவலர் தனது துப்பாக்கியால் பிடித்துத் தள்ளியபடிஅவரை கீழே இறக்க முயன்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அழகிரி, நான் தான் இறங்கிக்கிட்டு தானே இருக்கேன். ஏன் தள்றே. நான் இறங்கமாட்டேன். நீ செய்றதை செய் என்று கூறிவிட்டு திரும்ப வேனுக்குள் போய் உட்கார்ந்தார். இதையடுத்து அவரைச்சமாதானம் செய்து போலீசார் அழைத்து வந்தனர்.

அவர் 5வது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி இந்திராணி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏராளமானதிமுகவினரும் திமுக வழக்கறிஞர்களும் உள்ளே நுழைய போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளுஏற்பட்டது.

இதனால் எரிச்சலடைந்த நீதிபதி, வழக்குக்கு தொடர்பில்லாதவர்கள், சீருடை அணியாத போலீசார்,பத்திரிக்கையாளர்கள் அனைவரும் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை ஏற்றுபத்திரிக்கையாளர்களும் திமுகவினரும் வெளியேறினர்.

ஆனால், சீருடை அணியாத சிஐடி போலீசார் நீதிபதியின் உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து அங்கேயே இருந்தனர்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, அழகிரியை ஜூலை 7ம் தேதி வரை காவலில் வைக்கஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+