நாளை டாக்டராகிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை கெளரவ டாக்டர் பட்டம்வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தரிசு நில மேம்பாடு, ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி, வேளாண் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளதாகக்கூறி ஜெயலலிதாவுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கோவை வேளாண் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
நாளை இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவ், ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
இதற்காக ஜெயலலிதா நாளை கோவை வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications