வாக்காளர் அடையாள அட்டை: புதுவை சாதனை !
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
இந்தியாவிலேயே முதல் முறையாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில், 99 சதவீத வாக்காளர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, புதுவை தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம்பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே இந்த அளவுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை வேறு எந்த மாநிலமும்வினியோகிக்கவில்லை.
டெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் புதுவை தலைமை தேர்தல் அதிகாரி விஜயன் தலைமையில், மாநிலத்தேர்தல் அதிகாரிகள், அலுவலர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ பாராட்டினார்.
புதுவையை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று அப்போது லிங்டோகேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications