அதிமுக எம்.பியின் உதவியாளர் மீது போலீஸ் தாக்குதல்: கமிஷ்னர் விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞரும், அதிமுக எம்.பியுமானஜோதியின் உதவியாளர் போலீசாரால் தாக்கப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகரபோலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரே நேரில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ள ஜோதி, ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலாவிடமும் செல்வாக்கு பெற்றவர்.இவர்களது வழக்குகளை கவனித்து வருபவர்.
இவரது உதவியாளர் சண்முகசுந்தரம். அண்ணாநகரில் உள்ள ஜோதியின் வீட்டுக்கு ஜோதியும் சண்முகசுந்தரமும்நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் இரவுச் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோலீஸ்காரரான ரங்கராஜன் இந்தக் காரை நிறுத்தினார்.
அப்போது ஜோதி, தான் ஒரு எம்.பி என்பதைச் சொன்னார். இதையடுத்து அந்தக் காரை போலீஸ்காரர்விட்டுவிட்டார்.
ஜோதியை வீட்டில் விட்டுவிட்டு சண்முகசுந்தரம் திரும்பி வந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோலீஸ்காரரிடம் போய், எங்க காரை எதுக்கு நிறுத்துனே என்று கேட்டுள்ளார். வழக்கமான சோதனைக்குத் தான்நிறுத்தினேன். அப்புறம் தான் விட்டுவிட்டேனே என்று போலீஸ்காரர் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போதுசண்முகசுந்தரத்தை போலீஸ்காரர் ரங்கராஜன் சரமாரியாக அடித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இரவோடு இரவாக திருமங்கலம் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் துணை கமிஷ்னர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ரங்கராஜன்ஆகியோர் போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் நேரில் அழைத்து இன்று விசாரணை நடத்தினார். போலீஸ்காரர் மீதுநடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications