தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 6,300 கோடியை தாண்டியது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் 27 ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமான சாப்ட்வேர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கேவைமருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்த பார்க் கட்டப்பட்டவுள்ளது.
சாப்ட்வேர் தொழிலில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மிக வேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. இதையடுத்து கோவையில் சாப்ட்வேர் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பூங்காவைஅமைக்க தமிழகம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் சாப்ட்வேர் பார்க் அமைப்பது தொடர்பாக உடனடியாக ஒரு குழுவை அமைக்குமாறு மாவட்டநிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் விவேக்ஹரிநாராயண் தெரிவித்தார்.
கோவையில் நடந்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய விவேக்,
கோவை பகுதியில் இருந்து சாப்ட்வேர் ஏற்றுமதியை பல மடங்காக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாப்ட்வேர்பார்க்கை அமைக்கும் வேலையை தமிழக அரசு மேற்கொள்ளும்.
ஆனால், அந்தப் பகுதியை ஒட்டி அடுக்குமாடிக் குடியிருப்புகள், மார்க்கெட்டுகள், பள்ளிகள் போன்றஅத்தியாவசிய அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தப் பூங்காவை அமைக்கும் பணியை தமிழக அரசின் மின்னணு தொழில் பிரிவும் (எல்காட்), தமிழகதொழில்துறை மேம்பாட்டுக் கழகமும் (டிட்கோ) இணைந்து மேற்கொள்ளும்.
இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இது 14சதவீதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இதை மேலும்வேகப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
2001-02ம் ஆண்டில் தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 5,223 கோடியாக இருந்தது. 2002-03ம் ஆண்டில் இதுரூ. 6,315.15 கோடியாக உயர்ந்தது. இது சுமார் 20 சதவீத வளர்ச்சியாகும்.
தொடர்ந்து வளர்ந்து வரும் சாப்ட்வேர் தொழிலுக்கு ஈடுகொடுக்கவும், போதிய கட்டமைப்பை உருவாக்கவும்தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 12 மில்லியன் சதுர அடி ஆபீஸ் ஸ்பேஸ் தேவைப்படும்.
சாப்ட்வேர் நிறுவனங்கள் அடுக்குமாடிக் கட்டடம் கட்ட விண்ணப்பித்தால் அதற்கு அனைத்துத் துறைகளிடமும்உடனடியாக அனுமதி தருவதற்காக ஒரு சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் விவேக் ஹரிநாராயண்.


