மாஜி மனைவியின் மகனை கடத்தியதாக மாஜி எம்.எல்.ஏ. கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முதல் மனைவியின் மகனை கடத்தியதாக முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித் தேவர் கைது செய்யப்பட்டார். இதில்அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவியின் மகன் பன்னீர்செல்வமும் அவரது உறவிர்ஒருவரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டித் தேவரின் முதல் மனைவியின் மகன் சிவராமன். இவர் கடந்த 1997ம் ஆண்டுகாணாமல் போய் விட்டார். இதுகுறித்து மதுரை திடீர் நகர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குமதுரை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந் நிலையில், சமீபத்தில் திருமங்கலத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் வேறொரு வழக்கில் போலீஸில் பிடிபட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆண்டித் தேரிவன் இரண்டாவது மனைவியின் மகன் பன்னீர் செல்வம்,தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரும்தான் சிவராமனைகடத்தியதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் இரவில் ஆண்டித் தேவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று இரவு மதுரை 5-வது குற்றவியல் நீதிபதி இந்திராணி வீட்டில்

ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் உடல் நிலை சரியில்லை என்று ஆண்டித் தேவர் கூறியதால் மதுரை அரசினர் பொது மருத்துவமனையில்அவர் சேர்க்கப்பட்டார். மற்ற இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிவராமனை இவர்கள் என்ன செய்தார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. இதுவரை அது குறித்தவிவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

-->
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+