காவிரி விவகாரம்: கர்நாடக விவசாயிகள் தஞ்சை வருகை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கக் குழுவினர் வரும் 14 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தின் காவிரிப்படுகை மாவட்டங்களை பார்வையிட்டு, தமிழக விவசாயிகளும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளை ஒதுக்கிவிட்டு இரு மாநில விவசாயிகளும் தங்களுக்குள் பேச்சு நடத்திதீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இரு மாநில விவசாயிகள் சங்கத்தினரும்தமிழகத்திலும், கர்நாடகத்திலும் சுற்றுப் பயணம் செய்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர் தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு வருகை தரஉள்ளனர்.

இது குறிதது தமிழ்நாடு விவாசியிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் துரை மாணிக்கம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:

காவிரி நீர் பங்கீடு குறித்து இரு மாநில விவசாய சங்க தலைவர்கள் கூட்டம் சென்னையிலும், பெங்களூரிலும் 3முறை நடந்துள்ளன. கர்நாடக காவிரி பாசன பகுதிக்குச் சென்று அங்குள்ள பாசன, பயிர்ச்சாகுபடி முறைகள்,அணைகளின் நீர் இருப்பை தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்கள் பார்வையிட்டனர்.

இதே போல இங்குள்ள காவிரி பாசன பகுதிகளான தஞ்சை,நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதியின் உண்மைநிலையை அறிய வரும் 14,15,16ம் தேதிகளில் கர்நாடக விவசாய சங்க தலைவர்கள் வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழக விவசாய முறைகள் பற்றி கர்நாடக விவசாயகளிடம் தவறான கருத்தைஉருவாக்கியதை மாற்றி, கடந்த மூன்று கூட்டங்களிலும் உண்மை நிலையை கூறியுள்ளோம். தமிழக காவிரி பாசனபகுதியில் மூன்று போகம் நெல் சாகுபடியில் ஒரு போகத்தைக், குறைக்க வேண்டுமென அங்குள்ளவர்கள் கருதினர்.

இங்கு 11 மாவட்டங்கள் காவிரி பாசனத்தை நம்பி இருந்தாலும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் தான்முழுமையாக இந்நீரை நம்பியுள்ளன. அம் மாவட்டங்களில் ஜூன் 12ல் மேட்டூர் அணை திறந்தால் 4.5 லட்சம்ஏக்கர் குறுவை, தாளடியும், 8 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது.

1973க்குப் பின் கடந்த 30 ஆண்டுகளில், 17 ஆண்டுகளில் ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படவில்லை. அந்தஆண்டுகளில் குறுவை மற்றும் சம்பா பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது என்பதை கர்நாடக விவசாயிகளுக்குவிளக்கினோம்.

இது தவிர இந்த மாவட்டங்களில் நான்கில் ஒருபங்கு நிலம் கடந்த பல ஆண்டுகளாக தென்னை, பாமாயில், வாழை.யூகலிப்டஸ், சவுக்கு, மலர்சாகுபடி, நிலக்கடலை, சோயா, உளுந்துப்பயிர் போன்ற மாற்றுப்பயிர் சாகுபடிக்குமாற்றப்பட்டுள்ளன என்பதையும் கூறியுள்ளோம்.

அவர்கள் இங்குவரும் போது நேரிடையாக இது பற்றி அறிய வைக்க உள்ளோம். பின்னர் 16ம் தேதி தஞ்சையில்நடக்கும் இரு மாநில தலைவர்கள் கூட்டத்தில் பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை பகிர்வது பற்றி பேசப்படும்.

குறுவை சாகுபடியை கைவிடுங்கள் என கர்நாடக நிபுணர்களும், கர்நாடக அரசும் தமிழகத்தை நிர்பந்திப்பதை ஏற்கமுடியாது. 35 லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தினர் வேலைவாய்ப்பும்,வருவாயும் காவிரி நீரையே நம்பியுள்ளது.

அரசியல் லாபம் கருதி இப்பிரச்சனையை தொடர்ந்து அரசியலாக்கி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று இருமாநில அரசியல்வாதிகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+