தா.கி. கொலை வழக்கு: மன்னனின் கார் டிரைவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின்தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னனின் கார் டிரைவர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தா.கி. படுகொலை தொடர்பாக அழகியின் ஆதரவாளர்களான மன்னன், கராத்தே சிவா, முபாரக் மந்திரி,எஸ்.ஆர்.கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மன்னனின் கார் டிரைவர்களான ராஜா மற்றும் பாலகுரு ஆகியோரையும் அண்ணா நகர் போலீஸார்கைது செய்துள்ளனர். சதிச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி இவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மன்னன் திமுக ஆட்சியில் மதுரை ஆவின் பால் பண்ணையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுவரை மிகச்சாதாரண வாழக்கை நடத்தி வந்தவர் திடீரென பெரும் பணக்காரரானார். பல கார்கள், வீடுகள் என வசதிகள்குவிந்தன. இவரது கார்களை ஓட்ட பல டிரைவர்கள் வேலைக்கு உள்ளனர்.












Click it and Unblock the Notifications