மூளை சிறிதுதான், அதற்காக அதை உதாசீனப்படுத்தினால்? ... கருணாநிதி கேள்வி
சென்னை:
எட்டு சாண் உடம்பில் மூளை சிறிய பாகம்தான். அதற்காக மூளையை உதாசீனப்படுத்தி விட முடியுமா என்றுமுதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாமக்கல் விழாவில் பேசிய முதல்வர் ஜெலலிதா, தமிழகமக்கள் தொகையில் வெறும் 2 சதவீதமே உள்ள அரசு ஊழியர்களை விட 98 சதவீதம் உள்ள மக்கள்தான் முக்கியம்என்று பேசியுள்ளார்.
எண் சாண் உடம்பு, 70 கிலோ இருக்கிறது. அதில் மூளை அரை கிலோ அல்லது ஒரு கிலோ தான் இருக்கும்.மூளையின் அளவு மிகச் சிறியது என்பதால் மூளையைப் பற்றிக் கவலையில்லை, உடல்தான் முக்கியம் என்று கூறிவிட முடியுமா?
அரசு ஊழியர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். டிஸ்மிஸ்உத்தரவுகளை உடனே வாப பெறுவது தான் அரசுக்கும் மாநிலத்துக்கும் நல்லது என்றார்.
கருணாநிதியுடன் குஜ்ரால் சந்திப்பு:
முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் இன்று தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.
மத்தியில் தேவே கெளடா தலைமையிலான ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபோது, அதைத் தொடர்ந்து அதேகட்சியைச் சேர்ந்த குஜ்ராலை பிரதமராக்கியதில் திமுகவும் முக்கிய பங்கு வகித்தது.
அதற்கு முன்பே வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதே திமுகவுடன் நல்லுறவு கொண்டிருந்தவர் குஜ்ரால்.
இந் நிலையில் கடந்த இரு நாட்களாக சென்னையில் உள்ள குஜ்ரால் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ளகருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய குஜ்ரால்,
நானும் கருணாநிதியும் பழைய நண்பர்கள். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். நான் சென்னைவந்தால் கருணாநிதியை சந்திக்காமல் போவதில்லை. மேலும், முரசொலி மாறன் உடல் நிலை குறித்தும்கருணாநிதியிடம் கேட்டறிந்தேன் என்றார்.
தமிழக அரசு ஊழியர்கள் லட்சக்கணக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்துக் கேட்டபோது, தமிழக அரசுஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறித்து கருணாநிதி மிகவும் வருத்தம் தெவித்தார்.
அரசு ஊழியர்கள் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது. ஜனநாயகநாட்டில் வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க டியாதது, அதை யாரும் தடை செய்யவும் முடியாது.
இப்படி ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கானோரை வீட்டுக்கு அனுப்பியதை நான் எங்கும் எப்போதும்கேள்விப்பட்டதே இல்லை என்றார்.
மீண்டும் மூன்றாவது அணி அமைப்பது குறித்து கருணாநிதியுடன் பேசினீர்களா என்று கேட்டதற்கு, நான்அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டேன். கருணாநிதியுடன் அரசியல் ஏதும் பேசவும் இல்லை என்றார்.
கருணாநிதி கூறுகையில், தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்தெல்லாம் குஜ்ராலுடன்பேசவில்லை. அதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications