மதுரை கஞ்சா பெண்கள்; ரூ. 1.4 கோடி பண விவகாரத்தில் நடராஜன்!!
மதுரை:
மதுரையில் கஞ்சா, ஹெராயின் கடத்திய வழக்கில் கைதான தாய், மகள் விவகாரத்தில் சசிகலாவின் கணவர்நடராஜனின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.
மதுரை தாசில்தார் நகரில் வசித்து வந்த இந்த இரு பெண்களின் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தரூ. 1.4 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
| தாசில்தார் நகரில் உள்ள அன்புநகர் பாரத் தெருவில் ஒரு வீட்டுக்கு சில வருடங்களுக்கு முன் வாடகைக்குக்குடியேறியவர்கள் பாண்டியத் தேவர்- ரமிஜா தம்பதி. இஸ்லாமியரான ரமிஜா, பாண்டியத் தேவரை காதலித்துத்திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது பெயரை ரெஜினா என்று மாற்றிக் கொண்டார் ரமிஜா.
இவர்களுக்கு ராஜா, ஜனனி (வயது 21) என்று இரு குழந்தைள். இதில் ராஜா கொல்கத்தாவில் வேலை பார்த்துவருகிறார்.ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாண்டியத் தேவர் இறந்துதுவிட்டார். இதையடுத்து ரெஜினாவும் (வயது 41),ஜனனியும் அதே வீட்டில் வசித்து வந்தனர். ராஜா மதுரைக்கு வருவதே இல்லை. மதுரையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த ஜனனிக்கு விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்று ஆசைவர, தனது நடை உடையை மாற்றினார். |
| அப்போது தான் சில முக்கியஸ்தர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டுளளது.
இதன் பின்னர் குடியிருந்தவீட்டையே வாங்கும் அளவுக்கு வசதியும் வந்துள்ளது. வீட்டில் ஏ.சி, செல்போன்கள் என தாயும் மகளும் வலம்வந்தனர். இது அக்கம் பக்கத்தினருக்கு புகைச்சலையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. |
|
இதையடுத்து போலீசார் இவர்களது வீட்டை அதிரடியாக சோதனையிட்டபோது கஞ்சா, அபின் ஆகியவை கிலோகணக்கில் சிக்கியதாவும், ரூ. 1.4 கோடி பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
| இந் நிலையில் இவர்கள் வீட்டில் பணம் இருந்தது உண்மை தான் என்றும், ஆனால், கஞ்சா இருந்ததாக போலீஸ்சொல்வது சரியல்ல என்றும் ஒரு தரப்பில் கூறுகின்றனர்.
ஏர்ஹொஸ்டஸ் கனவில் இருந்த ஜனனியை, தாயாரே பல முக்கிய புள்ளிகளிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அதன்மூலம் முறைகேடாக ஜனனி பணம் ஈட்டியதாகவும் தெரிகிறது. மேலும் ஒரு கட்டத்தில் அதிமுக புள்ளி மூலம்நடராஜனும் ஜனனிக்கு அறிமுகமானதாகவும் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்ததாகவும்,சமீபத்தில் ரகசிய திருமணமும் கூட செய்து கொண்டு சில நாடுகளுக்கு ஜாலி டூர் போய் வந்ததாகவும் தகவல்கள்வரத் தொடங்கியுளளன. |
வீட்டில் பிடிபட்ட பணம் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மூலம் தான் ஜனனிக்கு வந்திருக்க வேண்டும்என்கிறார்கள்.
ரூ.1.40 கோடு பணம் கைப்பற்றப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கருப்பாயூரணி போலீஸ்ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாரில் இருந்து எஸ்.ஐ. வரை யாருக்குமே எந்த தகவலுமே தெரியவில்லை.
எல்லாமே இன்ஸ்பெக்டர் கணேசன் நேரடி விசாரணையில் நடைபெறுவதாக கூறுகின்றனர். எதைக் கேட்டாலும்இன்ஸ்பெக்டரிடமே கேட்டு கொள்ளுமாறு கூறி போலீஸார் வாய்திறக்க மறுக்கின்றனர்.
கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட பணத்தை போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு நீதிபதிசம்பத்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து 1.4 கோடி பணம் போலீஸ் ஸ்டேஷசனில் மிக பலத்த பாதுகாப்புடன்வைக்கப்பட்டுள்ளது.
சாதாரண வாழ்க்கை நடத்தி வந்த இந்த பெண்களின் வாழ்க்கையில் கடந்த 9 மாதங்களில் தான் ஆடம்பரம்அதிகரித்துள்ளது. இந்சக் கால கட்டத்தில் ரெஜினாவும் ஜனனியும் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும்எம்.நடராஜனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்போது இவருக்குநடராஜன் ஏகப்பட்ட பணம், நகைகளைத் தந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த பெண்களின் மதுரை வீட்டில் சோதனை நடந்தபோது ஒரு பெட்டி நிறைய தங்க நகைகளை போலீஸார்கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த நகைகள் எங்கே என்பதற்கும் சரியான பதில் இல்லை.
நிறைய கஞ்சா, ஏகப்பட்ட பணம், அதே நேரத்தில் சிறிது நகைகள் இருந்ததாகக் கூறி வழக்கு போடுமாறு மேலிடம்மதுரை போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து நகைகள் சென்னையில் ஒரு முக்கியபுள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் நீலாங்கரையில் இவர்களுக்கு ஒரு பங்களாவும் உள்ளது. கைது செய்யப்பட்ட ரெஜினாவும் ஜனனியும்இந்த வீட்டுக்கும் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இப்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்















Click it and Unblock the Notifications