கேரள லாரி ஸ்டிரைக்: தமிழகத்திற்கு பெரும் நஷ்டம்
கோவை:
கேரளாவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் தமிழகத்தில் காய்கறிகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தமிழக உற்பத்தியாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கேரளத்துக்கு அரிசியில் ஆரம்பித்து காய்கறிகள் வரை தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன. கேரள லாரிகள் தினமும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்து இவற்றை ஏற்றிச் செல்கின்றன.
இவை தவிர தமிழக லாரிகளும் ஆயிரக்கணக்கில் இந்த சப்ளையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக மதுரை, தேனி, கொடைக்கானல், கோவை, ஊட்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர், நாமக்கல் நகரங்கள், மாவட்டங்களில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் கேரளத்துக்குச் செல்கின்றன.
கேரளாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 4,000 லாரிகள் கேரளாவுக்குள் நுழைய முடியாமல் வாலையாறு சோதனைச் சாவடியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் காய்கறிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரிகளில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி அளவுக்கு தமிழக வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, நாமக்கல் நகரிலிருந்து கேரளாவுக்குச் செல்ல வேண்டிய ரூ. 2 கோடி முட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த முட்டைகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்ல வேண்டிய பூக்கள், மலைக் காய்கறிகள் உள்ளிட்டவை தேங்கிக் கிடக்கின்றன. களியக்காவிளை பகுதியில் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நாகர்கோவிலிலும் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
-->-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications