போலீஸைத் தாக்கி கள்ளச்சாராய வியாபாரிகள் மீட்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மீன்சுருட்டியில், போலீஸாரிடம் பிடிபட்ட கள்ளச்சாராய வியாபாகள் 4 பேரை,கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் அதிரடியாக மீட்டுச் சென்றது.
போலீஸார் பறிமுதல் செய்து வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
தடுத்த போலீஸாரையும் அக்கும்பல் தாக்கியது.
மீன்சுருட்டிக் காவல் நிலையத்தினர், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் சாத்துக்குளம் என்ற இடத்தில்கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
அப்போது நான்கு பேரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம் பிடிபட்டது.
நான்கு பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றி உட்கார வைத்த போலீஸார் அப்பகுதியில் வேறு யாரும்மறைந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. கத்தி, கட்டைகளுடன் வந்தஅக்கும்பல் போலீஸாரைத் தாக்கியது.
பின்னர் ஜீப்பில் உட்கார வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய வியாபாகளையும், கள்ளச்சாராயத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியது.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்துபோன போலீஸார் சுதாரித்துக் கொண்டு மாவட்டகாவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழிக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். காயமடைந்த சில போலீஸார் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications