டிரான்ஸ்பருக்கு காரணமாக இருந்த கைதியை விரட்டி பிடித்த வார்டன்
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய நான்கு கைதிகளில் ஒருவனை சிறையின் வார்டன் மேலூர்பஸ் நிலையத்தில் விரட்டிப் பிடித்தார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜா (40), கருவாயன் என்ற சால்னாபாண்டி (35), கந்தசாமி (31), சண்முகக்கனி (24) ஆகிய நான்கு கைதிகளும் அரசு ராஜாஜி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தனர்.
அங்கிருந்து இந்த நால்வரும் தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக மதுரை மத்திய சிறையின் துணை வார்டன் பாண்டியை வேலூர்துணை ஜெயிலுக்கு அரசு இடமாற்றம் செய்தது.
இதனால் பாண்டி தினமும் மதுரையில் இருக்கும் தனது வீட்டிலிகுந்து மேலூர் சிறைக்கு பணிக்குச் சென்று திரும்பிவருகிறார்.
இந் நிலையில் மேலூர் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்சுக்காக பாண்டி நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்தகந்தசாமியை அடையாளம் கண்டுவிட்டார். அதே போல கந்தசாமியும் பாண்டியைப் பார்த்துவிட்டு அங்கிருந்துஓட ஆரம்பித்தான்.
தனது டிரான்ஸ்பருக்குக் காரணமாக இருந்த கந்தசாமியை சிறை வார்டன் பாண்டி விடாமல் துரத்தினார். முள்புதர்கள், பள்ளம், மேடு என விரட்டிச் சென்றார். நீண்ட ஓட்டத்துக்குப் பின் கைதி கந்தசாமியை பாண்டிபிடித்துவிட்டார்.
கந்தசாமியை கையைக் காலைக் கட்டி மேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
துணை வார்டன் பாண்டி ஒரு ஓட்டப் பந்தய வீரராவார். இதை வைத்துத் தான் போலீஸ் வேலையிலேயே சேர்ந்தார்.
தனது திறமையை எல்லாம் சேர்த்துக் கொண்டு ஓட, ஓட விரட்டி கைதியைப் பிடித்துக் காட்டியுள்ளார் பாண்டி.
இதனால் அவருக்கு மீண்டும் மதுரைக்கே டிரான்ஸ்பர் தரப்படுமா என்று தெரியவில்லை.
தப்பிய மற்ற மூன்று கைதிகளில் ஒருவன் போலீசில் சரணைந்துவிட்டான். இன்னும் இரண்டு பேர்தலைமறைவாகவே உள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications