முறைகேடு வழக்கு: மனுவிலிருந்து ஜெ. பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 43 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகளை விசாக்கக் கோரிதாக்கல் செய்ய மனுவிலிருந்து முதல்வர் ஜெயலலிதா, கல்வி அமைச்சர் செம்மலைம மற்றும் கல்வி அதிகாரிஆகியோரின் பெயர்களை நீக்குமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜே.ஹாசன், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில்பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சில வழிகாட்டுதல்களைவகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல், 43 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளுக்கு தமிழக அரசு முறைகேடான வகையில் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ்களைவழங்கியுள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

கட்டட வசதி உள்ளதா, பிற வசதிகள் உள்ளதா என்பதைப் பார்க்காமல் இந்த 43 நிறுவனங்களுக்கும் அரசு அனுமதிஅளித்துள்ளது. மேலும், அதில் 2 கல்வி நிறுவனங்கள் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஒரே முகவயைக்கொடுத்து இரண்டு பெயர்களில் இயங்கி வருகின்றன.

எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உரிய நடவடிக்கைக்கும் உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவில் பிரதிவாதிகளாக முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி அதிகாரி ஆகியோரது பெயர்களை அவர்குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலித்த முதலாவது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுபாஷன் ரெட்டி மற்றும்

கோவிந்தராஜு ஆகியோர், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முதல்வர், கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிஆகியோரின் பெயர்களை நீக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+