ஆயுதங்களை குவிக்கும் புலிகள்: பேச்சுக்கும் தயார்
கொழும்பு:
பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் தங்களை ஆயுத ரீதியிலும் விடுதலைப் புலிகள் பலப்படுத்திவருகின்றனர்.
கிழக்கு இலங்கையில் சுமார் 5,000 விடுதலைப் புலிகள் மத்தியில் அதன் அரசியல் பிரிவுத் தலைவர்தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
இடைக்கால நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசு எங்களிடம் தந்துள்ள திட்டத்தை ஆராய்ந்து வருகிறோம்.அமைதி முயற்சிகளுக்கும் பேச்சுவார்த்தைக்கும் எங்களது கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.
அதே நேரத்தில் சிங்கள ராணுவம் ஆயுதங்களைக் குவிப்பதிலும், படைகளை நவீனமாக்குவதிலும் தீவிரமாகஈடுபட்டுள்ளது. ஆனால், நாங்கள் தான் ஆயுதங்களைக் குவித்து வருவதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
எங்கள் ஆயுத பலத்தை நாங்கள் பராமரித்து வருவது உண்மை. எங்கள் மக்களைக் காக்கத் தேவையான பலத்தைபராமரிக்க எங்களுக்கு உரிமை உண்டு. பேத்துவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவும் எங்கள் மீது போர்திணிக்கப்பட்டால் அதை சந்திக்கவும் எங்களுக்கு பலம் வேண்டும். அதற்கான ஆயுத பலத்தைத் தான் புலிகள்பராமரித்து வருகின்றனர்.
எந்த நாட்டையும் தாக்கவோ, பிற இன மக்களை அழிக்கவோ நாங்கள் எங்களை பலப்படுத்தவில்லை. எங்கள்மக்களைக் காக்கவும், எங்கள் சமூகத்தைப் பேணவும், நாட்டைக் காக்கவுமே ஆயுதம் வாங்குகிறோம.
இலங்கை அரசு தந்துள்ள இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. எங்கள்தலைமை அது குறித்து சட்ட, நிர்வாக நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது. விரைவில் எங்களது திட்டத்தையும்அரசிடம் சமர்பிப்போம்.
அதில் எங்கள் மக்களுக்கு என்ன வேண்டும், இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிளக்குவோம். நாங்கள் தரும் திட்டத்தை அரசு ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு முன் வருவோம் என்றார்தமிழ்ச்செல்வன்.
இதற்கிடையே, இன்னும் சில வாரங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என இலங்கை அரசுநம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் பெரிஸ் கூறுகையில், இடைக்கால நிர்வாகம் குறித்து நாங்கள் கொடுத்துள்ள திட்டத்தைபுலிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதனால் சில வாரங்களில் பேச்சு தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுஎன்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications