சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகர் கைது
கொடைக்கானல்:
பள்ளிச் சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துப் போய் பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலை பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ்.இவர் அந்தப் பகுதியின் திமுக பிரமுகர். தனது வீட்டுக்கு அருகே உள்ள பள்ளியில் படித்து வரும் 7 வயதுக்குட்பட்டசில மாணவிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற வில்லியம்ஸ், அவர்களுக்கு இனிப்புகள், ஜூஸ்போன்றவற்றைக் கொடுத்து பின்னர், அவர்களிடம் பாலியல் சேஷ்டைகளை செய்துள்ளார்.
இந்த சிறுமிகள் வில்லியம்ஸின் நடத்தை குறித்து தங்களது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த அவர்கள்மதுரை அரசு மருத்துவமனைக்கு தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று பரிசோதனை நடத்தினர். அப்போதுஅவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. வில்லியம்ஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.


