சீரணி அரங்கம் இடிப்புக்கு அரசு விளக்கம்
சென்னை:
மெரீனா கடற்கரையின் அழகைக் கெடுக்கும் வகையில் இருந்த காரணத்தால்தான் சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதுஎன்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்த, வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான மெரீனா கடற்கரைசீரணி அரங்கம் திடீரென்று இரவோடு இரவாக இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
சென்னை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இடிப்புச் சம்பவம் சரியானதுதான் என்று தமிழக அரசுகூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
அழகான சென்னை மெரீனா கடற்கரையின் அழகைக் கெடுக்கும் வகையில் சீரணி அரங்கம் இருந்தது. இதன்காரணமாக சில சட்டவிரோத செயல்களும் இரவு நேரத்தில் சீரணி அரங்கம் அருகே நடந்து வந்தது.
இதைத் தொடர்ந்து தான் சீரணி அரங்கத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதைத்தொடர்ந்து தற்போது மெரீனா கடற்கரை அழகாகவும், பாதுகாப்பாகவும் மாறியுள்ளது.
கடந்த ஜூலை 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் பேசுகையில்,
கடற்கரை சீரணி அரங்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு பொதுக்கூட்டங்கள், மதப் பிரசாரங்கள்நடைபெறும்போதெல்லாம் கடற்கரையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் காமராஜர்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே சீரணி அரங்கத்தை இடிக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். மேலும் அந்த இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் கடலுக்கு வெகு அருகில் சீரணி அரங்கத்தின் மேடை இருந்ததால், உப்புக் காற்று காரணமாக மேடையின்இரும்புத் தூண்கள் துருப் பிடித்து மிகவும் அபாயகரமான நிலையில் இருந்தன. எப்போது வேண்டுமானாலும்இடிந்து விடும் நிலையில் கட்டடம் இருந்தது.
இதுதவிர, அப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. பல்வேறுதவறான செயல்களும் நடந்து வந்தன. இதைக் காரணம் காட்டி சீரணி அரங்க பகுதியில் பொதுக் கூட்டங்கள் நடத்ததடை விதிக்கலாம் என்று மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமாரும் ஆலோசனை கூறினார்.
இவற்றை எல்லாம் பரிசீலித்த பிறகே சீரணி அரங்கம் இடிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications