பறக்க மறுத்த தேசியக் கொடி!!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நேற்று தேசியக் கொடியை ஏற்றியபோது, அது சிக்கிக்கொண்டதால் கீழே இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
திண்டுக்கல் ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்குமார் கொடியைஏற்றினார். ஆனால் மேலே சென்ற கொடி, இறுக்கமாக முடிச்சிடப்பட்டிருந்ததால், அவிழாமல் அப்படியேஇருந்தது.
முடிச்சை அவிழ்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முடியாத காரணத்தால் கொடி கீழேஇறக்கப்பட்டு, முடிச்சை லூசாக்கி விட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொடியேற்றியபோது, இதே பிரச்சனை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications