புதுவையில் இன்று 42-வது சுதந்திர தின விழா!!
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற்று இன்றுடன் 41 ஆண்டுகள் முடிவடைகின்றன.இதையடுத்து அங்கு இன்று (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தான் பாண்டிச்சேரிக்கு விடுதலை கொடுத்தது பிரான்ஸ்.
இதையடுத்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தையும், அதற்கு அடுத்த நாள் புதுவைசுதந்திர தினத்தையும் பாண்டிச்சேரி யூனியன பிரதேச மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் புதுவையின் 42வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications