தலைமை செயலக ஊழியர்களுக்கு கிடுக்கிப் பிடி: பொன்னையனிடம் பொறுப்பு
சென்னை:
தமிழக தலைமைச் செயலக ஊழியர்களின் பணி முறையை சீரமைப்பது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டகுழுவின் தலைவராக நிதியமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்,
இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட இக் குழுவில், உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதாஒருங்கிணைப்பாளராகவும், நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலர் மெய்கண்டதேவன், பொதுத்துறை செயலர்பிச்சாண்டி, நிதித்துறைச் சிறப்புச் செயலர் கிருஷ்ணன் ஆகியோர் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இப்போது இந்தக் குழுவுக்கு பொன்னையன் தலைவராக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலக பணிகள் தொடர்பான 16 அம்சங்கள் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைசெய்யும். தலைமைச் செயலக ஊழியர்களின் சலுகைகளைக் குறைத்தல், இடமாற்றம், அதிகார வரம்புகளைக்குறைத்தல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாகும்.
தலைமைச் செயலக பணியாளர்கள், வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதில்லை. இனி அதையும் மாற்றிஅவர்களுக்கும் பிற ஊழியர்கள் போல இட மாறுதல்களை அளிப்பது குறித்தும் இக் குழு பரிந்துரைகளைச்செய்யும்.
ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை தருவது, வேலையில் அதிக கவனம் செலுத்த வைப்பது, வேலைகளைகுறித்த நேரத்தில் முடிக்க காலக் கெடு நிர்ணயிப்பது, ஊழியர்களின் பொறுப்புகளை அதிகரிப்பது, அவர்களைகட்டாயம் கம்ப்யூட்டர்களை கையாளச் செய்வது ஆகியவை குறித்தும் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை அளிக்கஉள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications