கரப்பான் பூச்சி ஜனதா தொடர் போராட்டம்! டெல்லி ஜந்தரில் இணைய சேவை முடக்கம்! போலீஸ் குவிப்பால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு போலீசார் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்ற நிலையில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்லதாக குற்றம் சாட்டியிருக்கும் ஆப்ஜித் தீப்கே மீண்டும் அடக்குமுறையை ஏவ போலீஸ் திட்டமிட்டுள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், போராட்டத்தை இளைஞர்களும் மாணவர்களும் தீவிரப்படுத்தினர்.

Delhi Jantar Mantar protest Cockroach Janata CJP protest


டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்

இன்றுடன் 34-வது நாளை போராட்டம் எட்டியுள்ள நிலையில், இளைஞர்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், சல்மான் கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 25 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20 ஆம் தேதி போராட்டக்காரர்கள் சென்றபோது தடியடி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியே போர்க்களமானது.

அதன்பிறகும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென மோதல் ஏற்பட்டது. டோல்ஸ்டாய் மார்க் பகுதியில் போராட்டக்காரர்கள் சிலர் கல், பாட்டில் வீசியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் 2 உதவி காவல் ஆணையர்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. எனினும், சில மணி நேரங்களில் பதற்றம் சற்று தணிந்தது.

இணைய சேவை துண்டிப்பு

இது ஒருபக்கம் இருக்க, டெல்லி ஜந்தர் மந்தரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஆப்ஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார். இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதால், போராட்டக்காரர்கள் மீது மீண்டும் அடக்குமுறையை ஏவ போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்களா? என்று அப்ஜித் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் சில மர்ம நபர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்திய நிலையில், இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+