எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு! இன்னிக்கு விட்டா போச்சு! மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026- 2027-ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2026- 2027 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கியது.

mbbs tamil nadu

மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திய பிறகு தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீட் மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக் கல்வி இயக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீட் நுழைவு தேர்வு (NEET) அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடந்தது.

இதில் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தன.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 16ஆம் தேதி இரவு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. அதில் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று பஞ்சாப் மாணவர் ஆர்யன் குப்தா, ஹரியானா மாணவர் பன்சுல் பன்சால் ஆகிய இருவர் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

அதன் பிறகு ராஜஸ்தானை சேர்ந்த உப்லக்ஷ்யா கோயல் , பீகாரை சேர்ந்த ஆயுஷ் பலோடியா, மகாராஷ்டிராவை சேர்ந்த குடலே ஷ்ரவாணி கிருஷ்ணா, பீகாரை சேர்ந்த ரியா ரஞ்சந், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யன் துபே, பஞ்சாப்பை சேர்ந்த கீதான்ஷ் சரின், ராஜஸ்தானை சேர்ந்த கவுரவ் சிங், மகாராஷ்டிரா மோகனிஷ் மாருதி போன்ஸ்லே, ராஜஸ்தானை சேர்ந்த அபிலாஷ் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 138 மாணவர்கள், 720 மதிப்பெண் முதல் 690 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் 58 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் 19 மாணவர்கள் 700 மதிப்பெண்களையும் 1492 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேல், 10160 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல், 90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வில் முதல் 17 பேர் 705-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றனர்.

தமிழகத்தை பொருத்தமட்டில் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதல் மதிப்பெண்ணை பிடித்து தேசிய அளவில் 12 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இவர் 705 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதாவது 99.99915 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+