Jananayagan first half review: ஒன் மேன் ஷோ.. இன்டர்வல் பிளாக் தெறிக்குது.. விஜய்யின் ஜனநாயகன் ஃபர்ஸ்ட் ஆஃப் ரிவ்யூ
சென்னை: விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியாகி உள்ள ஜனநாயகன் இன்று அதிகாலை முதல்வரும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. பல மாதங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் வெளியான சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியா முழுக்க முதல் படத்தின் ஹுஸ்பம் காட்சிகள் ட்ரண்ட் ஆகி வருகிறது.
அதில் இந்த படத்தை பார்த்த சினிமா விமர்சகர் லட்சுமி காந்த் வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. அதில் படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் எப்படி இருக்கிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். ஜனநாயகன் ஒரு பழைய பாணி மாஸ் கமர்சியல் படம். ஆனால் அந்த படத்தை முழுவதும் விஜய்யின் திரை ஆளுமை தாங்கி நிற்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ஆக்ஷன், எமோஷனல், காமெடி, டான்ஸ் என எல்லா பகுதிகளிலும் விஜய் ரசிகர்களை ஏமாற்றாமல் முழு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு அவருடைய பதிவில் 3 விஷயங்களை பாராட்டி இருக்கிறார். அதில் விஜய்யின் இண்ட்ரொடக்சன் காட்சி, தளபதி கச்சேரி பாடல், இன்டெர்வெல் பிளாக் இந்த 3 காட்சிகளும் தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை அல்லும் தருணங்களாக அமைந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

ஜனநாயகன் விமர்சனம்
அனிருத் பின்னணி இசையையும் பாராட்டி இருக்கிறார். ஒரு முக்கியமான காட்சியில் கத்தி படத்தை நினைவூட்டுற மாதிரி அனிருத் பின்னணி இசை அமைந்திருப்பதாகவும் ராவணன் மவன்டா பின்னணி இசையும் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
ஜனநாயகன் முதல் பாதி விமர்சனம்
இயக்குனர் ஹெச் வினோத் குறித்து பேசும்போது, பகவந்த் கேசரி படத்தின் அடிப்படை ஐடியாவை வேறு மாதிரி மாற்றி பெரிய வில்லன் ட்ராக்குடன் இணைத்து புதிய கமர்சியல் பாணியில் கொடுத்திருக்கிறார் என்று தனது கருத்தை கூறியிருக்கிறார். அதோடு அவரைப் பொறுத்தவரை முதல் பாதி படம் முழுக்க விறுவிறுப்பாக போனதாகவும், 2வது பாதியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
ஜனநாயகன் ரசிகர்கள் கருத்து
அதுபோல ஜனநாயன் வெளியான சில மணி நேரத்திலேயே #janaNayagan இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒரு சிலர் விஜய்யின் ஒன் மேன் ஷோ, FDFS செம்ம மாஸ், இன்டர்வர் பிளாக் வேற லெவல் என்று பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் தங்களது விமர்சனங்களையும் பதிவு செய்து வருவதால் படம் குறித்து சோசியல் மீடியாவில் கலவையான கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

ஜனநாயகன் வசூல் நிலவரம்
படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவு மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் முதல் நாள் வசூல் நிலவரம் எவ்வளவு இருக்கும் என்றும் ரசிகர்களும், திரை உலகமும் கவனித்து வருகிறது. விஜய் சினிமாவில் உச்சத்தில் இருந்து நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்று ஒவ்வொரு இடத்திலும் சொல்லி இருப்பதால் அவருடைய கடைசி படம் யாரும் இதுவரைக்கும் செய்யாத வசூல் சாதனையை செய்ய வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்களும் தொண்டர்களும் போராடி வருகிறார்கள். அது வெற்றி பெறுமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
#JanaNayagan First Half Review 🍿
— Laxmi Kanth (@iammoviebuff007) July 23, 2026
- An Old School Mass Commercial Entertainer carried by the Massy Presence of #ThalapathyVijay..💥
- Thalapathy Vijay - One Man Show..⭐ Man aces Action, Emotion, Fun and Dance, keeping you entertained throughout..❣️🤝
- The Intro, Thalapathy… pic.twitter.com/BVxShmxMZM


Click it and Unblock the Notifications
