நான் கைதானால் தமிழகத்தில் பிரளயம் வெடிக்கும்: கருணாநிதி
திருச்சி:
நான் உள்பட எதிர்கட்சித் தலைவர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்தால் அடுத்த நாளே தமிழக அரசியலில்மிகப் பெரும் திருப்பு முனை ஏற்படும், பிரளயம் வெடிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
திருச்சியில் நடந்த திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
என் மீதும், இளங்கோவன், நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தைத்தூண்டியதாகக் கூறி எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டுள்ளது இந்த அரசு. எஸ்மா சட்டத்தின் கீழ் எங்களைக்கைது செய்தால் அடுத்த நாளே தமிழக அரசியலில் பெரும் திருப்பு முனை ஏற்படும், பிரளயம் வெடிக்கும்.
அதே நேரம் கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. பயப்படவும் மாட்டோம்.
காவிரிப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு இந்த அரசின் அனுபவமற்ற அணுகுமுறையே காரணம். இதனால்லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் இந்த சர்வாதிகார, மமதை பிடித்த ஆட்சிஒழிய மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், திருச்சி மாவட்ட திமுக சார்பில் ரூ. 2 கோடியே 59 லட்சம் தேர்தல் நிதி கருணாநிதியிடம்வழங்கப்பட்டது.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் திமுக உள்ளது. அப்படி இருக்கையில் அந்தக் கூட்டணிக்கு எதிராகவாக்களிக்க முடியாது. அதே போல அதிமுக ஆதரவை பா.ஜ.க. தலைவர்கள் கோரவில்லை. இவர்களாகவே ஓடிவந்து தான் ஆதரிப்பதாக சொல்கிறார்கள். இதனால் நான் என்ன செய்ய முடியும்.
அதே போல அவர்களுடன் சேர்ந்தால், நாங்கள் சேர மாட்டோம் என சிறுபிள்ளை விளையாட்டு விளையாடவும்நான் தயாராக இல்லை. கொள்கைரீதியிலான முரண்பாடு வந்தால் நிச்சயம் எதிர்ப்பேன்.
ராமர் கோவில் கட்டவோ, பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தாலோ அதை திமுக ஏற்காது. அப்படி ஏதாவதுசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் நிச்சயம் எதிர்த்தே வாக்களிப்போம் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications