ராஜீவ் பிறந்த நாள்: ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 59வது பிறந்த நாளையொட்டி இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில்அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தியின் 59-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதிலும் காங்கிரசாரால் கொண்டாடப்படுகிறது.நல்லிணக்க நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதா ராஜீவ் படத்திற்கு அஞ்சலிசெலுத்தினார். பிறகு ஜெயலலிதா தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை, அமைச்சர்கள், அதிகாரிகள்எடுத்துக் கொண்டனர்.
ராஜிவ் பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications