கோவை சிறையில் மதமாற்றம் நடக்கிறது: கூறுகிறார் ராமகோபாலன்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மத்திய சிறையில் உள்ள இந்துக் கைதிகளை, இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் செயல் நடந்து வருவதாகஇந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை சிறையில் உள்ள இந்து முன்னணித் தொண்டர்களை சந்திக்க வந்த ராம. கோபாலன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவை மத்திய சிறை, இஸ்லாமிய தீவிரவாத கைதிகளின் சொர்க்கபுரியாகத் திகழ்கிறது.

குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி இங்கு அடைக்கப்பட்டுள்ள, இஸ்லாமிய தீவிரவாதகைதிகள், இந்து கைதிகளை சீண்டி வருகின்றனர். அவர்களை மிரட்டியும், மூளைச் சலவை செய்தும் இஸ்லாமுக்குமாற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை புறநகரில் உள்ள ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர்கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.இதுதொடர்பாக போலீஸார் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிப்பதை வரவேற்கிறோம். இந்த சட்டத்தால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தபெண்களுக்குத்தான் அதிக நன்மை கிடைக்கும். சிறுபான்மை மக்களின் காவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் திமுக தலைவர் கருணாநிதி இந்தச் சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை என்றார் ராம.கோபாலன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+