மதுரை உயர் நீதிமன்ற கிளை கட்டடம்: நீதிபதிகள், அமைச்சர்கள் ஆய்வு
மதுரை:
மதுரையில் கட்டப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் கட்டடத்தை 3 உயர் நீதிமன்ற நீதிபதிகளும்அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
மதுரை உலகனேரியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள்முழுமையாக முடிந்துள்ள நிலையில் திறப்பு விழா தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. பல்வேறு காரணங்கள்கூறப்பட்டாலும், திறப்பு விழா எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை.
இந் நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோவிந்தராஜன், பத்மநாபன் மற்றும் முருகேசன் ஆகியோர் நேற்று உயர்நீதிமன்றக் கிளையை சுற்றிப் பார்த்தனர். அவர்களுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சிவப்பிரகாசம் ஆகியோரும்சென்றனர்.
நீதிமன்றத்தின் முகப்பில் சில மாற்றங்களைச் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர். மேலும், நீதிமன்றத்திற்கு அருகேஉள்ள சிறிய குளத்தை கையகப்படுத்தி அதை அழகுபடுத்தி நீர் சேமிக்கும் குளமாக மாற்றலாம் என்றும்ஆலோசனை தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் முன் தமிழன்னை மற்றும் நீதி தேவதையின் சிலைகளைவைக்கலாம் என்றும் மணிக்கூண்டுஅமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறினர்.
அதன் பின்னர் மேலூர் சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகளின் குடியிருப்பையும் நீதிபதிகள் சுற்றிப் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications