மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு மூடு விழா?
மதுரை:
மதுரையில் உள்ள வெளியூர் பஸ் பேருந்து நிலையமான மாட்டுத் தாவணி பஸ் நிலையத்தை மூடிவிட அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை போக்குவரத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மறுத்துள்ளார்.
மதுரை மாநகர மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண முந்தைய அதிமுக ஆட்சியில்மாட்டுத்தாவணியில் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் கடந்ததிமுக ஆட்சியில் இந்த பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன், வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும்இங்கிருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து அண்ணா பஸ் நிலையம், பழங்காநத்தம் பஸ் நிலையம்ஆகியவை மூடப்பட்டன.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துச் சென்று வரும் பேருந்துகள், நகருக்குள் செல்லாமல், ரிங் ரோடு வழியாகஇயக்கப்படுகின்றன. இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்தது.
தொடக்கத்தில் இந்த திட்டம் அமைதியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் சில தனியார் பேருந்துகள்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நகருக்குள் செல்வதற்கான அனுமதியைப் பெற்று முன்பு போலவே நகரசாலைகள் வழியாக செல்லத் தொடங்கின.
இதில் சில பேருந்துகள் அனுமதியில்லாமல் சென்று வரத் தொடங்கின. இதனால் மறுபடியும் நகருக்குள்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் அரசு பேருந்துகள் மட்டுமே ரிங் ரோடு வழியாக சென்றுவந்ததால் அவற்றில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை.
அனைத்துப் பயணிகளும் தனியார் பேருந்துகளையே நாடுகின்றனர். இதனால் அரசு பஸ்களில் வசூல்குறைந்துவிட்டது.
இதனால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை மூடி விட்டு மறுபடியும் பழங்காநத்தம், அண்ணா பேருந்துநிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இதை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,சென்னைக்கு ஒரு நீதி, மதுரைக்கு ஒரு நீதி என்பதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கிடையாது. அம்மாஆட்சியில் ஒரே நீதிதான்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை மூடுவதாக வந்துள்ள செய்தியில் துளி கூட உண்மை இல்லை.85 தனியார்பேருந்துகள், நீதிமன்ற உத்தரவை மீறி, நகருக்குள் பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் அரசுபேருந்துகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக சமீபத்தில் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட85 தனியார் பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுத்து, அவற்றை ரிங் ரோடு வழியாக இயக்கச் செய்யமுடிவெடுக்கப்பட்டது.
மற்றபடி மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தை மூடுவது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. தொடர்ந்துமாட்டுத்தாவணி பஸ் நிலையம் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், கூட்டத்தில் பஸ் நிலையத்தை மூடுவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக மதுரை அதிகாரிகள் மத்தியில்பேச்சு உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications