கேரள எம்.பிக்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள்: கண்ணப்பன் தாக்கு
சென்னை:
நதிகளை கடலில் கலக்க விட்டு வீணாக்குவோமே தவிர, தமிழகத்துடன் இணைக்க விட மாட்டோம் என்றுசொல்லி, இந்தியாவின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாக நிற்கும் கேரள மாநில எம்.பிக்கள் தேசத்துக்குவிரோதமானவர்கள் என மக்கள் தமிழ் தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கேரள மாநிலத்தில் பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகள் தேவையில்லாமல் கடலில் கலந்து வீணாகி வருகின்றன.இவற்றை தமிழகத்திற்குத் திருப்பி விட்டால் தென் தமிழகம் நல்ல பயன் பெறும்.
ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மறுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று கேரளமாநிலம் முரண்டு பிடித்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் கேரள மாநில எம்.பிக்கள் குழு பிரதமர்வாஜ்பாயை சந்தித்து பம்பா, அச்சன்கோவில் நதிகளை தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்கக் கூடாது என்றுமனு கொடுத்துள்ளனர்.
இது வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நதி நீரை வீணாக்கினாலும் வீணாக்குவோமே தவிர, இந்தியாவின்வளர்ச்சிக்குக் கை கொடுக்க மாட்டோம் என்று முட்டுக் கட்டை போடுவது போல உள்ளது கேரளாவின் போக்கு.
நதி நீர் இணைப்புத் திட்டமே இந்தியாவின் பஞ்சத்தைப் போக்குவதற்காகத்தான். எனவே, சிலர் கூறும் ஒவ்வாதகாரணங்களுக்கும் செவி சாய்க்காமல், தொலை நோக்குப் பார்வையுடன் இத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
