ஜெ. ஆட்சியை விரட்ட என் 25 ரூபாய் பேனா போதும்: கருணாநிதி
திருவண்ணாமலை:
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவே பொதுமக்கள் தாங்களாக முன் வந்து திமுகவுக்குதேர்தல் நிதியளிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறினார்.
திருவண்ணாமலையில், திமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
மீண்டும் அதிமுக ஆட்சிக்குவந்து விடக் கூடாது என்ற பயம் மக்களிடையே வந்துவிட்டது. எனவே தான்அவர்களாக முன்வந்து திமுகவுக்கு தேர்தல் நிதியளிக்கிறார்கள்.
மக்கள் கொடுக்கும் பணம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் முன் பணமாககொடுக்கப்படுவது போன்றதாகும். இது திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஓட்டுக்களைப் போன்றதாகும்.
நான் தினமும் பயன்படுத்தும் ரூ. 25 மதிப்பு பேனாவால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டுவேன்.
கெளரவ ரேஷன் கார்டு என்ற போர்வையில் ரேஷன் அரிசி கூட மறுக்கப்படும் அவல நிலைக்கு தமிழகம்தள்ளப்பட்டு விட்டது.
வணிகர்களுக்கு திமுக ஆட்சியில் எத்தனையோ சலுகைகள் தரப்பட்டன. அவற்றையெல்லாம் அவர்கள் மறந்தகாரணத்தினால்தான், இந்த அதிமுக ஆட்சியில் பல இன்னல்களை அவர்கள் சந்திக்கிறார்கள் என்பதை மனசுசுமையோடு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.
இந்தக் கூட்டத்தின்போது திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் தேர்தல் நிதியாகரூ. 4 கோடி கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.


