SSLC மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்
சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருந்தன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதி வெளியாகின. இந்த ஆண்டு நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மொத்தமாக 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பொதுத் தேர்வை சுமார் 8.82 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்தனர். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சிப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் 97.54 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் 97.41 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மேலும் திருச்சி 97.31 சதவீதமும், கன்னியாகுமரி 97.30 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றன.
இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் (ஸ்கேன் நகல்) பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை (24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275 ஆகும்.
விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுக்கூட்டல், மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான தேதி ஊடகங்கள் வாயிலாகவும், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்திலும் வெளியிடப்படும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications