கேரளாவில் தவெகவா? மற்ற மாநிலங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்.. தமிழிசை சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் வியக்கும்படியாக வெற்றியை பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு கேரளாவிலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக வீடியோக்கள் வெளியாகின. பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக கட்சியில் பலரும் ஆர்வத்துடன் தங்களை உறுப்பினராக்கி கொள்வதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இது பற்றி பேசிய பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன், "மற்ற மாநிலங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

பாஜக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கேரளாவில் தவெகவிற்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

Tamilisai Soundararajan Urges Caution as TVK Expands Membership Drive in Kerala

மற்ற மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கனும்

தேசிய தலைவர்கள் எல்லாரும் வந்தார்கள்.. பேசிய தலைவராக இல்லாமல் விஜய் ஜெயிச்சி இருக்கிறார். அதற்கு முன்பாக சினிமாவில் பேசியதை வைத்து விஜய் வென்றுள்ளார் அவ்வளவுதான். சினிமா மாயையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதுதான். கேரளாவிற்கு சென்று இருப்பதாக கேட்கிறீர்கள். மற்ற மாநிலங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புதியவர்கள்.. ஆனால் ஏற்கனவே அரசியலில் இருந்து மக்களுக்கு நல்லது செய்பவர்கள்.. அந்த அரசியல்வாதிகள் நிச்சயமாக அனுபவசாலிகள். ஒரே நாளில் நிறையா உறுப்பினர்கள் எல்லாம் சேர்த்ததாக சொல்கிறார்கள். அதனால், மற்ற மாநிலத்தில் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை

தொடர்ந்து இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசையிடம் வந்தே மாதரம் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், "இந்த விமர்சனம் தேவையில்லாது. வந்தே மாதரம் பாடல் நமது சுதந்திர உணர்வை தட்டி எழுப்பிய பாடல். இந்த பாடலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

உணர்வுபூர்வமாக இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கையை எல்லா மாநிலத்திற்கும் அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிமுறை வந்தது என்றால் பின்பற்றிதான் ஆக வேண்டும். ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவிலும் தவெகவா?

தமிழகத்தில் கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிடித்தது. தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழகத்தின் முதல்வராகவும் விஜய் ஆகி தேசிய அளவில் கவனம் பெற்றார். தேசிய அளவில் என்.டி. ராமாராவிற்கு அடுத்தபடியாக அதிகபட்ச வாக்குகளை சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய் பெற்றார். 34 சதவீத வாக்குகளை விஜய்யின் தவெக பெற்றது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்று கூட தெரியாத நிலையிலும் விசில் சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்துளனர். தமிழக அரசியலில் விஜய் செய்துள்ள இந்த சாதனை, இந்திய அளவில் கடந்த சில வாரங்களாக பேசப்படுகிறது. விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளர் ரேஞ்சுக்கு பில்டப் செய்து ரீல்ஸ்களையும் வட இந்திய ஜென்சிக்கள் போடும் அளவிற்கு விஜய் கவனம் பெற்றுள்ளார். தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு கணிசமான எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

கேரள அரசியல்

விஜய் வெற்றி பெற்ற நாளில் இருந்தே கேரளாவிலும் சில இடங்களில் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு மேலே ஒரு படி போய், கேரளாவில் தவெக கட்சிக்கு உறுப்பினர்கள் பணியும் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலக்காட்டிலும் தவெக ரசிகர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டங்களில் இளைஞர்கள் மட்டுமன்றி, பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டது கேரளா அரசியல் வட்டாரங்களை உற்று நோக்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+