ஆடு வெட்டத் தடை: பூசாரி சிறை வைப்பு-நெல்லையில் பரபரப்பு
நான்குநேரி:
நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே உள்ள ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோவிலில், ஆடு,பன்றிகளைப் பலியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியும், அதற்கு போலீஸார் தடைவிதித்தனர். சாமியாடி சிறை வைக்கப்பட்டதால் பக்தர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நான்குநேரி சுடலையாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தசமி திருவிழா வெகு சிறப்பாககொண்டாடப்படும். இந்த விழாவையொட்டி நூற்றுக்கணக்கான ஆடுகள், பன்றிகளை கோவில்பூசாரி வெட்டி பலி கொடுப்பார்.
வழக்கம் போல இந்த ஆண்டும் நேற்று விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.நள்ளிரவுக்கு மேல் ஆடு, பன்றி பலியிடுதல் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.ஆனால் இந்த முறை ஆடு, பன்றிகளைப் பலியிடக் கூடாது என்று போலீஸார் தடை போட்டுவிட்டனர்.
கோவிலுக்கு அருகே போலீஸ் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. இதை எதிர்த்து செந்தில்நாடார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், ஒத்தப்பனைகோவிலில் ஆடு, பன்றிகளைப் பலியிட தடை விதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பூஜைகள் தொடங்கின. ஆனால் மாலையில் கோவிலில்ஆடு, பன்றிகளைப் பலி கொடுப்பவரான பூசாரி, முத்துராஜ் என்பவரை அவரது வீட்டை விட்டுவெளியே வரக் கூடாது என்று போலீஸார் உத்தரவிட்டனர். மேலும் அவரை வீட்டுக்குள் சிறைவைத்து வெளியே போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வழக்கமாக, மேள தாளத்துடன் பூசாரி வீட்டுக்கு ஊர்வலமாக வந்து அவரை அழைத்துச் சென்று பலிகொடுக்கப்படும். அதுபோலவே மேள தாளத்துடன் பூசாரி வீட்டுக்கு ஊர்வலம் வந்தகலைஞர்களையும் போலீஸார் வேறு ஒரு இடத்தில் சிறை வைத்தனர்.
பூசாரி மற்றும் மேள தாளக் கலைஞர்கள் வராததால், கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானபக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பூசாரிக்கு வீட்டுக்குள்ளேயே அருள் வந்துசாமியாடத் தொடங்கினார். அப்படியும் அவரை போலீஸார் வெளியே விடவில்லை.
இந்த நிலையில் பூசாாரி இல்லாத நிலையில் நள்ளிரவு நேரமாகி விட்டதால் சாமக் கொடைகொடுக்கும் பூஜை தொடங்கியது. ஆனால் பூசாரி வராத காரணத்தால், சுடுகாட்டுக்கு சாமியாடிக்கொண்டே பூசாரி செல்லும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் பக்தர்களிடையே கொந்தளிப்புஉருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் பூசாரியை கோவிலுக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.அங்கு வந்தவுடன் மைக் மூலம் பூசாரியை பேசக் கூறினர். அவரும், அனைவரும் அமைதியாகஇருக்க வேண்டும். அனைவரும் கோவிலின் வெளிப்புறத்தில் விலங்குகளைப் பலியிடுங்கள். அதைநான் ஆவி ரூபத்தில் வந்து சாப்பிடுவேன் என்று கூறினார். அதன் பின்னர் மீண்டும் அவர்அங்கிருநது அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியில் நூற்றுக்கணக்கான ஆடுகள், பன்றிகள் பலிகொடுக்கப்பட்டன. போலீஸாரின் இந்த நடவடிககையால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.உயர்நீதிமன்ற உத்தரவு நகலை போலீஸாரிடம் காட்டியும் கூட பலனில்லை.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications