லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டி: காங். தலைவர்
சென்னை:
தமிழகத்தில் லோக் சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக அகிலஇந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் நிவாஸ் மிர்தா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க. ஆதரவு கட்சிகளுடன் கூட்டணிவைக்க காங்கிரஸ் தயாரில்லை. அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சியாகஅதிமுக உள்ளது. எனவே அந்தக் கட்சியுடன் வரும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் கூட்டணிவைப்பதற்கான வாய்ப்பே இல்லை.அதேபோல, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கூட்டணியில் அது இருக்கும் வரை அக்கட்சியுடனும் கூட்டணிவைப்பதற்கான வாய்ப்பில்லை.தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு திமுக வெளியேறினாலும் கூட, அதனுடன் கூட்டணிவைப்பது தொடர்பாக காங்கிரஸின் தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவுசெய்வோம்.தற்போதைய நிலவரப்படி லோக் சபா தேர்தலை தனித்துப் போட்டியிட்டு சந்திக்க காங்கிரஸ் கட்சிதயாராகி வருகிறது. தேவைப்பட்டால், சில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றார் அவர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications