அப்பல்லோ மருத்துவமனையில் மாறன் அனுமதி?
சென்னை:
அமெரிக்காவிலிருந்து இன்று சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனுக்கு மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையிலேயே சிகிச்சை தர அவரது குடும்பம் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இருதய நோய் காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்தியவிஞ்ஞான கழகத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதோடு, உடல் நலமும் மோசமடைந்தது.இதையடுத்து அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தாடிஸ்ட் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
அங்கும் அவரது நிலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் டெல்லி மற்றும் அப்பல்லோமருத்துவமனைகளில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் தவறு நடந்து விட்டதாகவும்,இதனால்தான் மாறன் நிலை மோசமடைந்தது எனவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும்மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார்.
இதற்கு அப்பல்லோ மருத்துவமனை உடனடியாக மறுப்பு தந்தது. மேலும், அப்பல்லோமருத்துவமனையில் தரப்பட்ட சிகிச்சையை கருணாநிதியே பாராட்டியதாகவும் இப்போது குற்றம்சாட்டுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் மாறன் மீண்டும் சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவருக்கு போரூர்ராமச்சந்திரா மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தரப்படவுள்ளது. ஆனால் மாறனுக்கு சிகிச்சைதரும் வகையில் அதி நவீன வசதிகள் இங்கு இல்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்க தரத்தில்இங்கு வசதிகள் இல்லை என்றும் இதனால் மாறனை இங்கு வைத்து சிகிச்சை தருவது கடினமானதுஎன்றும் தற்போது கூறப்படுகிறது.
மாறனுக்காக தயார் செய்யப்பட்டுள்ள தனி வார்டை நேற்று மாறனின் மகன் தாயநிதி மாறன் சென்றுபார்வையிட்டார். அப்போது அமெரிக்க டாக்டர்கள் கூறிய தரத்தில் வசதிகள் இல்லை என்றுமருத்துவமனை தலைவர் டாக்டர் வெங்கடாச்சலம் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சேலத்தில் முகாமிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்ட தயாநிதிமாறன், அப்பல்லோ மருத்துவமனையிலேயே மீண்டும் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யலாமாஎன்று ஆலோசனை கேட்டுள்ளார். முதலில் யோசித்த கருணாநிதி பின்னர் தானே அப்பல்லோமருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டியிடம் போனில் தொடர்பு கொண்டு பழைய விஷயத்தைமறந்து விடுமாறும், மாறனுக்காக தனி வார்டு ஒதுக்கி சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும்கோரியுள்ளார்.
முதலில் தயங்கி ரெட்டி பின்னர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சிகிச்சை தர அப்பல்லோ தயார்என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இன்று நள்ளிரவில் சென்னை வரும் மாறன் நேராகஅப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications