மருத்துவமனையில் சிசுக்கள் சாவு: மனித உரிமை கமிஷன் விசாரணை
சென்னை:
திருச்சி அரசினர் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவமனையில் 6 பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன்இறந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் கமிஷன் விசாரணைக்கு கமிஷன் உறுப்பினர் நீதிபதிசம்பந்தம் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசினர் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த 6பச்சிளம் குழந்தைகள் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டன. மருத்துவமனை டாக்டர்கள் மற்றும்ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமாகவே குழந்தைகள் இறந்து விட்டதாக புகார் கூறப்பட்டது.
நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு ஊழியர்கள் வற்புறுத்தவதாகவும், லஞ்சம் கொடுக்க மறுக்கும்நோயாளிகள் சரிவர கவனிக்கப்படுவதில்லை எனவும், இதன் காரணமாகவே 6 குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், அந்த குழந்தைகளின் பிணங்களை எடுத்துச் செல்லவும் லஞ்சம் கொடுக்கவேண்டியிருந்தது என்றும் நோயாளிகள் குமுறலை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதுதொடர்பாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் குழு நேரில்சென்று விசாரணை நடத்தியது. மேலும் குழந்தைகள் இறந்தது தொடர்பாக சென்னையில் உள்ளமாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்தநீதிபதி சம்பந்தம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டி.எஸ்.பி.புருஷோத்தமனுக்கு உத்தரவிட்டார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications