தமிழ் செம்மொழி கோரிக்கை: "மத்திய அரசு பரிசீலிக்கும்"
நாகர்கோவில்:
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரிவருவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் குழுபிரதமர் வாஜ்பாயை சந்தித்து மனு கொடுத்தது.
அந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்கும் என்று பிரதமர் வாஜ்பாய்உறுதிமொழி கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை வேறு இடத்தில் கட்ட உத்தேசித்திருப்பது நல்ல முடிவாகும்.தற்போதுள்ள கட்டடத்தில் இட நெருக்கடி நிலவுகிறது. எனவே புதிய இடத்தில் தலைமைச் செயலகம்அமைவது தேவையான ஒன்றுதான்.
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுவதை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுவரவேற்க வேண்டியதுதான். காரணம், தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நேர்த்திக் கடனைசெலுத்த விலங்குகளைப் பலியிடாத பல்வேறு முறைகள் உள்ளது.அதை பக்தர்கள்கடைப்பிடிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராம்புதூர் பகுதியில் ரப்பர் பூங்கா அமைக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 7 கோடியில் உருவாகும் இந்த ரப்பர் பூங்காவின் முதல் கட்டப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிவடையும்.
இதேபோல, கொளச்சல் துறைமுகப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றார் அவர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications